என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்லைன் விற்பனை"
- நாளிதழில் வெளியான செய்தி குறித்து பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
- டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் வினியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் நாளிதழில் செய்திகள் வெளிவந்தன.
நாளிதழில் வெளியான செய்தி குறித்து பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுவை அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம்.
- ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
சென்னை:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 12-ந் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
சென்னை - ராஜஸ்தான் மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (வியாழக்கிழமை) காலை 10.40 மணிக்கு தொடங்கி நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
பிரபல ஆன்-லைன் விற்பனை நிறுவனம் அமேசான். இந்த நிறுவனம் மூலம், விற்பனை செய்யப்பட்ட தரை விரிப்புகளில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.
இது சீக்கியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர்கள் கூட்டமைப்பு அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது.
அதில், இதுபோன்று ஆட்சேபனைக்குரிய பொருட்களை விற்பனை செய்ய நிரந்தர தடைவிதிக்க வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என உறுதி அளிக்க வேண்டும் என்றும் அமேசான் நிறுவனத்துக்கு சீக்கியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சீக்கியர்கள் ஆட்சேபனை தெரிவித்த சில மணி நேரத்தில் சர்ச்சைக்குரிய அந்த பொருட்கள் அமேசான் விற்பனை தளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. #Amazon #Doormat #Toilet #GoldenTemple
இந்தியாமுழுவதும் மருந்து கடை வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 8½ லட்சம் மருந்துகடைகள் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. அப்பல்லோ உள்ளிட்ட பெரிய மருந்து கடைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.
காலை 6 மணி முதல் மாலை 6-மணிவரை அனைத்து மருந்து கடைகளையும் மூடி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 6000 மருந்து கடைகள் மூடப்பட்டன.
தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த மருந்துகளில் பாதி விற்பனை சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்துக்கு மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் சென்னையில் அனைத்து பகுதியிலும் மருந்துகடைகள் அடைக்கப்பட்டிருந்தது.
வேலை நிறுத்தம் குறித்து மருந்து வணிகர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-
வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் ஆன்லைன் மருந்து விற்பனை சாத்தியமாகும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பொருந்தாது.
அதற்கான கட்டமைப்பு வசதி இந்தியாவில் கிடையாது. இது தவறான வழி முறையாகும். கார்பரேட் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தும் வகையில் ஆன்லைன் மருந்து வணிகத்தை தீவிரப்படுத்தி வருகிறது.
மருந்து தயாரிப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது தவறு இருந்து கண்டு பிடிக்காவிட்டால் அதனை மொத்த வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மூலம் திரும்ப பெற முடியும்.
ஆனால் ஆன்லைன் விற்பனையில் ஒருமுறை விற்ற மருந்தை திரும்ப பெற முடியாது. மருந்து கட்டுப்பாடு சட்டங்களை ஆன்லைன் வர்த்தகம் பின்பற்ற முடியாது. இது முற்றிலும் மருந்து கட்டுப்பாடு சட்டத்துக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருந்து கடை வணிகர்கள் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் கே.கே.செல்வன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1027 மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நிர்வாகி சத்திய மூர்த்தி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1984 மருந்து கடைகளும் இன்று மூடப்பட்டது. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீரா திரையரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்று கோஷமிட்டனர். #MedicalsStrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்